நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்யட்டும்..; அப்பறம் பேசலாம் – முதல்வர் பழனிசாமி

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘2ஜி வழக்கு முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

காங்கிரஸ்- திமுக ஆட்சியில் இருந்த போது தான் 2ஜி வழக்கில் ராசா சிறைக்கு சென்றார்.

பாஜக அவரை சிறையில் அடைத்து இருந்தால் அரசியல் என்று சொல்லலாம்.

ஆனால் காங்கிரஸ் தான் சிறையில் அடைத்தது’ என தெரிவித்தார்.

மேலும் ரஜினி கட்சி தொடங்கவிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும் அதற்கு பிறகு பதில் தருகிறேன். 

தற்போதைக்கு அவர் கருத்தை தான் சொல்லியிருக்கிறார் என்றும்; வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்துடன் கூட்டணி அமையலாம் என ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே