மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!!

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பலியான நோயாளிகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் மாலில் மூன்றாவது தளத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

இதனிடையே அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். முதலில் இந்த விபத்தில் இரு நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அதன்பின்னர் வெளியான தகவலில் 10 நோயாளிகளின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் 70க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அதில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதையடுத்து பலியின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே