நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானார்

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் நேற்று காலமானார்.

1973 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சௌத்ரி 2004ம் ஆண்டு உத்தரகாண்ட் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி அதிகாரி என்ற சாதனையை படைத்தார். தனது பதவியிலிருந்து 2007ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரித்வார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காஞ்சன் சௌத்ரி நேற்று காலமானார். காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியாவை நினைவுகூர்ந்து உத்தரகாண்ட் காவல்துறை ட்வீட் செய்துள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள போலீசார் காவல் துறையில் அவரது தனித்துவமான பங்களிப்பை நினைவுகூர்ந்து உள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே