மகாராஷ்டிர மாநிலத்தில் மார்ச் 28ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

மார்ச் 28 இரவு முதல் மகாராஷ்டிரத்தில் இரவுநேர பொதுமுடக்கம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தனி உத்தரவு விரைவில் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறையால் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே