வலிமை திரைப்படத்தின் Glimpse இன்று மாலை வெளியீடு
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடபட்டது. அதன் பின் நேற்று படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், வலிமை படத்தின் Glimpse வீடியோ இன்று மாலை 6.3மணிக்கு வெளியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளார்கள்.