முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர்.எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் தோற்றுவித்த டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

அப்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டில் நடிகர் விஜய்க்கும், 2017 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகுமாருக்கும் இதே பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே