கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அதிக விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் கொடு’ என்ற மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கார்த்திக் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு சாந்தனு பாக்கியராஜ், மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர். கார்க்கி எழுதிய இந்த பாடலுக்கு கார்த்திக் மற்றும் கானா குணா இணைந்து பாடியுள்ளனர்.
அதில் சாந்தனுவிடம் சண்டையிடும் காதலி மேகா ஆகாஷை, சாந்தனுவின் நண்பரான கலையரசன் பாடல் வழியாக கன்வீன்ஸ் செய்கிறார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.