சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். 

கடலூர், கம்மியம்பேட்டை பகுதியில் பெய்த கனமழையால் கடந்த 29ஆம் தேதி இரவு நாராயணன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

அதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஸ்வரி, பேத்தி தனஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து நடந்த இடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின், அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே