தேனிலவு சென்ற இடத்தில் பாராகிளைடிங் விபத்தில் உயிரிழந்த சென்னை இளைஞர்

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலிக்கு தேனிலவுக்கு சென்ற சென்னை இளைஞர், பாரா கிளைடரில் பறந்தபோது மனைவி கண்முன்னே கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தக்கரையைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும், பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலிக்குச் சென்ற தம்பதி, அங்குள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்தனர்.

தேனிலவு சென்ற இடத்தில் மணாலி அருகே உள்ள டோபியில் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டார் அரவிந்த்.

வானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றதாக கூறப்படுகிறது.

பல அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை சாகசத்திற்கு அழைத்துச் சென்ற பைலட் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராகிளைடரில் பறப்பது ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்தது என்றாலும், இதில் ஆபத்தும் நிறைந்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே