டாக்டராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

சூப்பர் ஹீரோ கெட்டப்பில் நடித்திருக்கும் இந்த படம் குழந்தைகளிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில் தற்போது ஹீரோ படத்தை தயாரித்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

அந்த படத்தில் இணை தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்சன்ஸ் உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் டாக்டர்.

வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய கதை களத்தை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக அதிகமாக காமெடி படங்களில் நடிக்கவில்லை.

எனவே அதற்கு தீனி போடும் வகையில் டாக்டர் திரைப்படம் இருக்கும் என அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே