திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுபாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பதில் வரும் வரை கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் அரசகுமார் கலந்து கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள அரசகுமார், தம் மீது நடவடிக்கை எடுக்க நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும், இது தொடர்பாக தேசிய பொறுப்பாளர் முரளிதரராவிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைவர் இல்லாத போது அமைப்பு செயலாளர் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை என்றும் அரசகுமார் கூறியுள்ளார்.