ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த குழந்தை சுஜித், அக்டோபர் 25ம் தேதி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்க விரைந்த தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்க முயற்சித்தனர்.
ஆனால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதனை அடுத்து, அப்பகுதிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக் குழுவினர் கடந்த 4 நாட்களாக குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களின் 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது.
குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் சுஜித்தின் உடல் சிதைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தை சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனை அடுத்து, குழந்தை சுஜித்தின் உடல் புதூரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.