ஆவின் பால் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்…

தமிழகம் முழுவதும் இயங்கும் ஆவின் பாலகங்களில், தட்டுப்பாடின்றி ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (27/03/2020) அதிகாலை 03.30 மணி முதல் 09.00 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என்றும்; பால் முகவர்களின் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யமாட்டார்கள் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுப்பாடின்றி ஆவின் பாலகங்களில் கிடைக்கும் எனவும், பால் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் பால் கிடைக்காது என்ற அச்சத்தால், ஒரே நேரத்தில் ஆவின் பாலகங்களில் குவிவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே