ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்காததால், நாளை அரசு மருத்துவமனைகளில் கையெழுத்து இடாமல் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து அக்டோபர் 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும், அப்போது அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, டெங்கு காய்ச்சல் பிரிவுகளில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன் அரசு மருத்துவர்கள் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே