3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

தொடர் மழையால் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர் கபினி அணைகளில் இருந்து 27 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணை நடப்பாண்டில் இரண்டு மாதங்களிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் நாற்பத்தி நான்காவது முறையாக நீர்மட்டம் 120 அடி எட்டிருக்கிறது.

அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே திறந்து விட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவர்ஹவுஸ் வழியாக 22 ஆயிரம் கனஅடி நீரும், 16 கண் மதகு வழியாக 5 ஆயிரம் கனஅடி நீரும் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே