பிமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தற்போது இடைக்கால ஜாமீன் பெற்று வெளிவந்துள்ளார் 81 வயதான கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ்.

கடந்த 2018 ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு, 2021 பிப்ரவரி 22ல் மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அவர் காவலிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

புனேவில் கடந்த 2017 டிசம்பர் 31ல் எல்கர் பரிஷத் மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த நாளில் வன்முறை சம்பவங்கள் வெடித்தது.

இந்த வன்முறைக்கு, முந்தைய நாள் நடந்த மாநாடுதான் காரணம் என்றும், அதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காகவும் வரவர ராவ் கைது செய்யப்பட்டார்.

FREE AT LAST ! VARAVARA RAO OUT OF NANAVATI HOSPITAL 11.45 PM, 6TH MARCH 2021 PIC.TWITTER.COM/E3S0JZNQEM— INDIRA JAISING (@IJAISING) MARCH 6, 2021

கைது செயப்பட்டடு சிறையிலிருந்த அவருக்கு உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 149 நாட்களாக சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இதனையடுத்து அவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தனர்.

நீதிமன்றம் 6 மாதத்திற்கு ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் நேற்று இரவு மும்பை நானாவதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் முதல் பெரிய மகிழ்சிகரமான செய்து தனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஜாமீன் என வரவர ராவ் மகள் பவானி கூறியுள்ளார்.

ஏறத்தாழ 2.5 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தந்தைக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வரவர ராவ் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். மேலும், ரூ.50,000 பிணை தொகையையும் செலுத்திய பின்னர், மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்கிற நீதிமன்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்ட பின்னரே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே