மின்தடையா? – புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் மின்தடை தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண 1912 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் 044 – 24 95 95 25 என்ற 24 மணி நேரமும் செயல்படும் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை பாதிப்புகளை சமாளிக்க மின்சார வாரியத்தின் தயார் நிலை குறித்து அத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மின் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் மழையின் போது மின்சாரம் தொடர்பான விபத்துக்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே