ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனையொட்டி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்படுவதால் பேரண்டபள்ளி, கோப்புச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டும், நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதை எட்டி உள்ளது.
இதனால் கெலவரப்பள்ளி அணையை ஒட்டியிருக்கும் சித்தன்னப்பள்ளி, தட்டண்ணப்பள்ளி, கெலவரப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்று பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், நீரில் விளையாட குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.