மேட்டுப்பாளையம் கோவை பயணிகள் ரயில் இன்று முதல் இன்ஜின் இல்லாத மெமு ரயில் ஆக மாற்றப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் உருவான இந்த ரயிலில் மொத்தம் எட்டுப் பெட்டிகள் உள்ளன.
ஒரு பெட்டியில் 90 பேர் அமரும் வகையிலும் 20 முதல் 25 பேர் நின்று கொண்டு பயணிக்கும் அளவிலும் உள்ளன.
மெமு ரயில் முதல் பெட்டியிலிருந்து கடைசிவரை உள் பகுதியில் பயணிகள் நடமாடும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மெமு ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.