பாஜகவின் முப்பெரும் விழா பேரணியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற பாஜக பேரணியின் போது சாலையில் தேங்கி இருந்த கழிவு நீரையும் பொருட்படுத்தாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.

காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்த நாள் மற்றும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து தமிழை உலக அளவில் பெருமைப்படுத்தியதாகவும் கூறி முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

இதனையொட்டி சென்னையில் ஷெனாய் நகர் சாலையிலிருந்து டிபி சத்திரம் வரை நிர்மலா சீதாராமன் தலைமையில் பாஜக வினர் பேரணியாக சென்றனர்.

இதில் வானதி சீனிவாசன், நடிகை கவுதமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அத்துடன் ஆங்காங்கே பாஜக கொடியையும் நிர்மலா சீதாராமன் ஏற்றிவைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே