காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் முதல் முறையாக தமிழகத்தில் நடைபெற்றது.
இதுவரை டெல்லி பெங்களூருவில் நடைபெற்று வந்த கூட்டம் முதல் முறையாக திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
நீர்வளத்துறை செயலாளரான நவீன் குமார் தலைமையிலான கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில பொதுப்பணித் துறை உயரதிகாரிகள், காவிரி தொழில்நுட்ப குழுவினர் என 16 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், பருவமழை பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழுவிடம் விவசாயிகள் சங்க தலைவர்கள் அய்யாக்கண்ணு, சிவசூரியன், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.