திருவாரூரில் நாளை ஒருநாள் மட்டும் முழு முடக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.
சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரையில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 புதன் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 28ம் தேதி இரவு 9மணி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் நாளை ஒருநாள் மட்டும் முழு முடக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.