வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்து இருக்கிறது.

இதனை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்து அதன் விலையை உயர்த்தி விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விற்பனை விலை ஒரு கிலோ 120 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

இதையடுத்து, வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே