2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2017-18, 2018-19 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்து, உயர் கல்வி பயிலாதவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2017-18, 2018-19 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், மடிக்கணினி வழங்க வேண்டாமென சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
2017 – 2018ம் ஆண்டு படித்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 2018-2019ம் ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், முதலாமாண்டு தொழிற்கல்வி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் 15 லட்சத்து 53 ஆயிரத்து 359 மடிக்கணினிகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினிகள் வழங்குவதில் நடப்பு ஆண்டு படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.