தெற்கு ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை

தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த பிரபாகர் என்பவர் தொடுத்த மனு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது என்றும் அதில் ரயில்வே விதிவிலக்கு அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ, அதன் நிர்வாகிகளோ மீறினால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இதை தெற்கு ரயில்வே 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே