நடிகை சமந்தாவின் மகளிர் தின சவால் இதுதான்

நடிகை சமந்தா தனது மகளிர் தின சவால் குறித்து சோஷியல் மீடியாவில் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மகளிர் தினம் என்பதால் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் தனது சவால் குறித்து எழுதியுள்ளார்.

நடிகை சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, “நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது. நம்முடைய மதிப்பை தெரிந்து ஒரு போதும் அதற்கு குறைவானதை அனுமதிக்கக்கூடாது.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் எனது சவால் என்னவென்றால், என்னை நானே மேலும் நம்பிக்கை கொள்ள போகிறேன். அதையே நீங்களும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த ஒரு செயலும், மாற்றமும் உங்களிடம் இருந்தே தொடங்க வேண்டும். இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று கூறியுள்ளார். சமந்தாவின் மகளிர் தின சவால் அவரது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது .


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே