புதுச்சேரியில் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நடைமுறையை பின்பற்றி புதுச்சேரி மாநில அரசும் விடுமுறை அறிவித்துள்ளது. 

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ப்ரீ கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே