தனுஷ் #D43 படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்..!!

கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் தனுஷ் 43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார் என்பதை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

துருவங்கள் 16 படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த கார்த்திக் நரேன், அடுத்ததாக மாஃபியா படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இப்படம் தோல்வியை சந்தித்ததோடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தனுஷின் 43 வது படத்தை இயக்கவிருப்பதகாக அறிவித்தார் கார்த்திக் நரேன்.

இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அஜித்தின் விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த அதே நிறுவனம்தான்.

தனுஷ் 43 படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று அனைவரும் காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 5 மணிக்கு தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்பதை கார்த்திக் நரேனும் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸும் அறிவித்திருக்கிறார்கள்.

ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமாகிய மாளவிகா மோகனன், தனது இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார்.

விரைவில் மாஸ்டர் திரைக்குவரவுள்ள நிலையில், மூன்றாவது படத்திலேயே துனுஷுடன் இணைந்துள்ளார். பாலிவுட் ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா மோகனன் பிறந்தது கேரளாவாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே மும்பைதான்.

தமிழ் படங்களில் நடித்துக்கொண்டே பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் மாளவிகா மோகனன் நடிப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அடுத்தப்படத்தை பகிர்ந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறது.

இவ்வளவு காலமாக போற்றிய ஒரு நடிகருடன் இறுதியாக நடிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே