டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.

111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் மும்பை களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், குயின்டன் டி காக் நிதானமாக விளையாடினர். டி காக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து , கிஷனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார் . 37 வது பந்தில் அரைசதம் அடித்த கிஷன் , அதிரடியாக விளையாட தொடங்கினார். 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்த மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து மிகவும் வலிமையான அணியான டெல்லி தொடர்ந்து 4ஆவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே