தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை முதல் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலையடுத்து தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன.
பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னையிலும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.
நாளை முதல் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இயங்கியது போல நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.