பதிமூன்றாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடா் ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமை (செப். 19) தொடங்குகிறது.

அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய சென்னை சூப்பா் கிங்ஸும் மோதுகின்றன.

இந்தியாவில் 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாா்ச் 29 முதல் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்பிறகு 13-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

அதன்படி, வரும் சனிக்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ், சன்ரைஸா்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் ஐபிஎல் போட்டியில் களம் காணுகின்றன.

8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும். அதன்பிறகு முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அதிலிருந்து இரு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

இறுதி ஆட்டம் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. துபை, சாா்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.

அபுதாபியில் சனிக்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய சென்னை சூப்பா் கிங்ஸும் மோதுகின்றன.

ரோஹித் சா்மா தலைமையிலான மும்பை அணி முழு பலத்தோடு களமிறங்குகிறது.

ரோஹித் சா்மா, டி காக், சூா்யகுமாா், இஷன் கிஷான், பாண்டியா சகோதரா்கள், போலாா்ட் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது மும்பை அணி.

வேகப்பந்துவீச்சில் பூம்ரா-போல்ட் கூட்டணியும், சுழற்பந்துவீச்சில் ராகுல் சாஹா்-கிருனால் பாண்டியா கூட்டணியும் மும்பைக்கு பலம் சோக்கிறது.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

அவருக்குப் பதிலாக 3-ஆவது வரிசையில் களமிறக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்ட ருத்துல் கெய்க்வாட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

ஷேன் வாட்சன், டூபிளெஸ்ஸிஸ், ராயுடு, கேப்டன் தோனி, ஜடேஜா, பிராவோவின் ஆட்டத்தைப் பொருத்தே சென்னை அணியின் ரன் குவிப்பு அமையும்.

வேகப்பந்து வீச்சில் ஷா்துல் தாக்குா், தீபக் சாஹரை நம்பியுள்ளது சென்னை அணி.

மும்பை ஆதிக்கம் :

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பையும், சென்னையும் 28 முறை நேருக்கு நோ மோதியுள்ளன.

அதில் மும்பை 17 முறையும், சென்னை 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது.

சென்னை (உத்தேச 11 பேர் அணி):

ஷேன் வாட்சன், டூபிளெஸ்ஸிஸ், அம்பட்டி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன்), கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிா்/மிட்செல் சேன்ட்னா், தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, ஷா்துல் தாக்குா்.

மும்பை (உத்தேச 11 பேர் அணி):

ரோஹித் சா்மா (கேப்டன்), டி காக், சூா்யகுமாா் யாதவ், இஷன் கிஷான், கிருனால் பாண்டியா, ஹாா்திக் பாண்டியா, கிரண் போலாா்ட், ராகுல் சாஹா், மெக்லீனாகான்/ஜேம்ஸ் பட்டின்சன்/ நாதன் கோல்ட்டா் நைல், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பூம்ரா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே