சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

சபரிமலையில் இன்று மகர ஜோதி விழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சபிரிமலையில் மண்டல பூஜை முடிவடைந்து, மகர ஜோதி தரிசனத்திற்காக நடைத் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மகர ஜோதியை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்துள்ளனர்.

முன்னதாக பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படும் தங்க அங்கிகள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மாலை 6:25 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

தீபாராதனை முடிந்த சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஏற்றப்படும்.

தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சி தரும்.

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் ஐயப்பனுக்கு மகரசங்கரம பூஜை நடத்தப்படும்.

ஜோதி தரிசனத்திற்காக புல்மேட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9:00 மணி முதல் வடசேரிக்கரையில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே