விஜய்-இன் “மாஸ்டர்” செகண்ட் லுக் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் “மாஸ்டர்”.

விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து வருகிறார்.

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

விரைவில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.

MasterSecondLook

தற்போது வெளியான செகண்ட் லுக் போஸ்டர் விஜய் மட்டும் இருப்பதால் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்தது.

வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கும் படக்குழு, ரிலீசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே