மேட்டூர் உபரி நீர் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச்-க்குள் நிறைவேற்றப்படும் : முதல்வர்

மேட்டூர் உபரி நீர் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் உட்பட பலர், திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கொங்கணாபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரி நீரை கொண்டு வர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே