BREAKING NEWS : மஹாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

மஹாராஷ்டிராவில் நாளை பட்நாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ரகசிய வாக்கெடுப்பு கூடாது, வீடியோ பதிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், என்.வி ரமணா, அசோக் பூஷன் , மற்றும் சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே