மதுரை : அவசர திருமணங்களுக்கு மத்தியில் பறக்கும் விமானத்தில் கல்யாணம்..!!

மதுரையில் பிரபல தொழிலதிபரின் மகன் ராகேஷ். இவருக்கும் மதுரையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா காலம் என்பதால் விழாவில் சிறிதாக நடத்தவேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. பணக்காரர்களான இவர்களுக்கு சிறிதாக எளிமையாகவும் திருமணத்தை நடத்த விரும்பவில்லை.

இதனால் குறைவான உறவினர்கள் இருந்தாலும் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். அப்போது தான் கொரோனா தாக்கவே முடியாதபடி விமானத்தில் பறந்தவாறு திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதனையடுத்து மதுரையிலிருந்து தூத்துக்குடி தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்தனர். அதன்படி இன்று விமானத்தில் திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. காலை 7.30 மணி அளவில் விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் மணமகன் மணமகன் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் 161 பேர் பயணித்தனர்.

விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் ராகேஷ் மணமகள் தீச்சனாவுக்கு தாலி கட்ட திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. காலை ஏழு 7:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. மதுரையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திருமணத்திற்காக விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே