எச்சரிக்கை..!! நாளை முதல் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்த முழு முடக்கம் அறிவிக்கப்பட்டும் காலை 10 மணி வரை கடைகள் திறக்கலாம் என தளர்வு இருந்தது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் கொரோனா கட்டுக்குள்வரவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளைமுதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அதனைக் கண்காணிக்க சென்னையில் காவல்துறை பல ஏற்பாடுகளை செய்திருக்கின்றன. அதன்படி, சென்னையில் தளர்வில்ல முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி 2 முறை பிடிப்பட்டால் வாகனம் திருப்பித் தரப்படாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 320 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. எனவே ஊரடங்கை மீறி வெளியே வருவோர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவை நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே