லாட்டரி விற்பனை போலீஸார் உதவியுடன் நடைபெறுகிறது : முத்தரசன்

தமிழகத்தில் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள், போலீஸார் உதவியுடன் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். 

உள்ளாட்சித் தேர்தல், ஜனநாயகப்பூர்வமாக நடைபெற வாய்ப்பில்லை எனவும், முத்தரசன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் லாட்டரி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள், காவல்துறை உதவியுடன் நடந்து வருவதாக குற்றம் சாட்டிய முத்தரசன்; இந்த சம்பவங்களில் சமூக விரோதிகளுக்கும் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே