குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புதுக்கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சட்டம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் எனவும்; இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இதனை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.