அடுத்தக்கட்ட போராட்டம் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் தொடரும் : மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தங்களது அடுத்தக்கட்ட போராட்டம் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை வாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதற்காகவும், அவரின் உணர்வுகளை பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 23-ம் தேதி நடந்த பேரணியில் பங்கேற்றதற்காக 8 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் இந்த பேரணியில் 5 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர் என அமைச்சர்கள் பொய்யான தகவலை முன்வைப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

தங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஆலோசனை செய்யப்படும் என கூறிய ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே