ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெல்லூர்த்தி மண்டலத்திலுள்ள மாதாபுரம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பெண்கள், ஒரு குழந்தை, 5 ஆண்கள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் ஹஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த டெம்போ வேன் கர்னூல் மாவட்டத்தில் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி நொறுங்கிய வேனில் பயணம் செய்தவர்களில் 8 ஆண்கள், ஒரு குழந்தை ,ஐந்து பெண்கள் என 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 வாகனங்களுக்கு இடையே சிக்கி மரணம் அடைந்தவர்கள் உடல்களை கிரேன் உதவியுடன் மீட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றிய வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.