காஷ்மீரில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜூலை 5 -ஆம் தேதி, குல்காமில் உள்ள கிராமத்தில் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மட்டும் 12க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே