வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்ச நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி அமைப்பினுடைய தலைவர்கள் பதவி ஏற்பார்கள் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

எனவே டிசம்பர் மாதத்தில் உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறிய அவர், இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை போன்றே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே