தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியிடம் பேசவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கே. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், Right time, Right decision என்பது தான் தமிழகத்தின் செயல்பாடு எனக் கூறினார்.

மேலும் தமிழக முதல்வர் முயற்சி காரணமாக தற்போது தமிழகத்திற்கு 18,236 கோடி அளவிற்கு முதலீடு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த, அவர் மின் கட்டண உயர்வு குறித்து போராட்டம் அறிவித்துள்ள திமுக தனது ஆட்சியை நினைத்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சி காலத்தில் இருட்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். திமுக அவர்கள் ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகள் மோசமான நிலையில் தான் மக்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அந்த வகையில், அனைத்திற்கும் போராட்டம் நடத்தும் திமுக, ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் திமுக போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர்கள் பேசுவதாக வந்த தகவல் வதந்தி என்றும்; அவ்வாறு யாரும் பேசவில்லை, அதேபோல அமைச்சர்கள் யாரும் அவ்வாறு துரோகம் செய்பவர்கள் இல்லை என்றும் கூறினார்.

கோவையில் பெரியாரின் சிலை அவமதிப்புக்கு பதில் அளித்த அமைச்சர், எல்லா தலைவர்களும் போற்ற கூடிய அரசு தான் அதிமுக என்றும், யார் தலைவர்களை அவமதித்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொரோனாவை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக தான் தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும், முன்பை விட தற்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அரசு எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிக்கை விடும் செயல்கள் நடைபெற்று வருகிறது எனவும், நிபுணர்கள் குழு, உள்ளிட்ட குழுக்கள் நம்மிடம் உள்ளது.

எனவே நம்மால் சமூக பரவலை மறைக்க முடியாது.

மேலும் சமூக பரவல் ஆகியுள்ளதா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர் ஆகியவை தான் கூறவேண்டும். இதுகுறித்து கூற திமுக தலைவர் ஸ்டாலின் மெடிசன் படித்துள்ளாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து 10 நாட்களில் கொரோனா கட்டுப்படுத்த அரசின் இலக்கு உள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே