மு.க.ஸ்டாலினுக்கு, அழகிரி என்றால் ஆகவே ஆகாது – ராஜேந்திர பாலாஜி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அழகிரி என்றால் ஆகவே ஆகாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி உள்ள காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்காததால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது ஆதங்கத்தை அறிக்கையாக வெளியிட்டார்.

இதனால் திமுக-காங்கிரஸ் கட்சியினுடைய முக்கிய தலைவர்கள் சிலர் மாறிமாறி தங்களது கருத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்து விடும் என சிலர் கருத்து தெரிவித்துவந்தனர்.

அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த முறிவும் இல்லை என அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியையும் மறைமுகமாக குறிப்பிட்டு ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் மதுரை என்றாலும் சரி, கடலூர் என்றாலும் சரி; அழகிரி என்ற பெயரே ஸ்டாலினுக்கு ஆகாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே