உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கிய நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக 6-10-2021 மற்றும் 9-10-2021 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.
அதன் விவரம் :
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 72,071 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 15,967 நபர்களும் ,ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 8,671 நபர்களும்,மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 1,122 நபர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வரும் 25-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.