மதுபோதையில் ரகளை… உணவகத்தில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடல்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் ஹோட்டலில் சாப்பிடும் போது சிரித்தற்காக இருதரப்புக்கு இடையே மோதல்; ஏற்பட்டு ஹோட்டலில் இருந்த பொருள்களை ஒருவர் ஒருவர் மீது வீசி மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க் எதிரே தனலெட்சுமி என்ற தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கரநாரயணன் ஆகியோர் உணருவருந்தியுள்ளனர். அதே போல் கிருஷ்ணா நகரை சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோர் அருகில் உணவருந்தியுள்ளனர். அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வழக்கமாக இந்த ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம் என்பதால் அங்கு பணிபுரியும் ஊழியருடன் சிரிச்சு பேசியுள்ளனர்.

அப்போது, அருகில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை பார்த்து தான் அவர்கள் சிரிப்பதாக நினைத்து, அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் எங்களை பார்த்து ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.

நாங்கள் உங்களை பார்த்து சிரிக்கவில்லை என்று அருண்குமார் நண்பர்கள் கூறியுள்ளனர்.

இல்லை எங்களை பார்த்து தான் நீங்கள் சிரித்தீர்கள் என்று பிரசாத் நண்பர்கள் கூற இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சாப்பிட்டதற்கு பில் கொடுத்து விட்டு கிளம்ப முயன்றுள்ளனர்.

ஆனால் மீண்டும் வந்து பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் எங்களை பார்த்து எப்படி சிரிக்கலாம், எப்படி பேசலாம் என்று கூற இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதையெடுத்து இரு தரப்பினரும் ஒருவரை தாங்கி கொண்டனர்.

ஹோட்டலில் இருந்த சேர், தண்ணீர் செம்பு, குழம்பு வாளி என வீசி ஒருவர் ஒருவரை தாக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் ஹோட்டல் போர்களம் போன்று காட்சியளித்தது.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க போலீசார் விரைந்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இரு தரப்பு கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே