சென்னையில் டாஸ்மாக் திறப்பு: “யார் பாதிக்கப்பட்டாலும் வருமானம் வந்தால் சரி… பெரிய தப்பு பண்றீங்க” : ஸ்டாலின்!!

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது பெரும் தவறு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் கொரோனா பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கட்டுப்பபாட்டு பகுதிகள் மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் இருந்து சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ” சென்னை தவிர பிற மாவட்டங்களில் Covid19 பரவியதில் TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.

யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே