உள்ளாட்சி தேர்தல் : 2,98,335 பேர் மனுத்தாக்கல்

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து 2,98,335 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.

கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, பெறப்பட்ட வேட்புமனுக்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குப் பிறகு எந்தெந்த பதவிகளுக்கு எத்தனை எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,6,657 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

இதற்கு அடுத்ததாக கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 54,747 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32,939 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 3,992 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே