விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் முதல்வர் – கனிமொழி பேச்சு..!!

திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; மக்களை அதிகமாக துன்புறுத்தியவர் தான் கிருஷ்ணராயபுரத்தில் போட்டியிடுகிறார்.

வேலை வாய்ப்பு இல்லாத 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி.

மக்களை முட்டாள் என நினைக்கும் அனைவருக்கும் முட்டாள் ஆக்கப்படுவார்கள், இதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.

மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தை தமிழ்நாட்டில் இருந்து ஆள வேண்டும், டெல்லியில் இருந்து ஆளக்கூடாது என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே